Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அலுவலகம் சார்பில் 650 முன்வரிசைப் பணியாளர்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் செலவில் ரமலான் பரிசுகள்
அரசியல்

பிரதமர் அலுவலகம் சார்பில் 650 முன்வரிசைப் பணியாளர்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் செலவில் ரமலான் பரிசுகள்

Share:

ரமலான் மாதத்தில் பணியில் ஈடுபட்டு வரும் முன்வரிசை பணியாளர்களை பாராட்டும் வகையில், ஜுவாடா ரமலான் மதானி: முன்னணிக் களப் பணியாளர்களுக்கு பாராட்டு” திட்டத்தை செயல்படுத்த பிரதமர் அலுவலகம் 3 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது.

இத்திட்டமானது, ரமலான் மாதத்தில், தங்கள் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் முன்வரிசை பணியாளர்களுக்கு, பிரதமர் தமது நன்றியையும் அன்பளிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

இப்தார் உணவுப் பொதிகள் வழங்கும் இத்திட்டத்தின் படி, இறுதி மாநிலமாக மலாக்கா தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் இன்று விநியோகம் செய்யப்பட்டதாக பிரதமரின் அரசியல் செயலாளர் சான் மிங் காய் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 650 போலீஸ் அதிகாரிகளும், பணியாளர்களும் அப்பரிசுகளைப் பெற்றனர்.

ரமலான் மாதத்திலும் முன்வரிசைப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

சிலர் பணியில் இருக்கும் போதே நோன்பு திறக்க வேண்டிய சூழலும் உள்ளது.

அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சான் மிங் காய் குறிப்பிட்டுள்ளார்.

Related News