ஒவ்வொரு காலகட்டத்திலும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வெளியிட்டு வருகின்ற சினமூட்டும் அறிக்கையினால் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அல்லாதவர்களை இலக்காக கொண்டு அரசியல் சதுரங்க ஆட்டத்தை முன்னெடுத்துள்ள அப்துல் ஹாடி அவாங்,இனவாதத்தை முன்நிறுத்தி, பச்சை அலையை ஏற்படுத்த முற்படுகிறார் என்று சிகாம்புட் எம்.பி.யுமான ஹன்னா யோவ் குறிப்பிட்டார். காலம் சென்ற மத குரு, நிக் அப்துல் அஜீஸ், பாஸ் கட்சிக்கு தலைமையேற்றிருந்த போது பாஸ் கட்சியைக் கண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் அஞ்சியது கிடையாது. ஆனால், அப்துல் ஹாடி அவாங், பாஸ் கட்சிக்கு தமையேற்றப்பின்னர் அக்கட்சியை கண்டு மக்கள் அஞ்சிகின்றனர். ஹாடி அவாங்கின் ஒவ்வொரு அறிக்கையும் முஸ்லிம் அல்லாதவர்களின் மனங்களில் இடியாய் இறங்கியிருப்பதை மக்கள் மறந்து விட வில்லை என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார். பாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மிரட்டல் இல்லை என்று அதன் முக்கியத் தலைவர் கூறியிருப்பது தொடர்பில் ஹன்னா இயோ எதிர்வினையாற்றினார்.

Related News

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!


