பினாங்கு, பாயா தெருபோங் கில் உள்ள செரி ரெலாவ் தேசியப்பள்ளி வாக்களிப்பு மையத்தில் வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படாதது கண்டு பிடிக்கப்பட்டதால், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. எனினும் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்ட பின்னர் மிக தாமதமாக பிற்பகல் 1.26 மணியளவில் மறுபடியும் வாக்களிப்பு ஆரம்பமானது. காலையில் வைக்கப்பட்ட அந்த வாக்குப்பெட்டியில் ஏற்கனவே 177 வாக்குகள் செலுத்தப்பட்டப்பின்னரே அந்த வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படவில்லை என்பதை பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஓய் நெய் ஒன்ன் கண்டுபிடித்தார்.
சீல் வைக்கப்படாத பெட்டிக்குள் போடப்பட்ட 177 வாக்குகளை தாம் அங்கீகரிக்க இயலாது என்று அந்த வேட்பாளர் தமது ஆட்சேபத்தை தெரிவித்ததுடன், வாக்களிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து வாக்களிப்பை தேர்தல் ஆணையம் நிறுத்தியது. அந்த வாக்களிப்பு மைய வழித்தடத்தில் 719 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பதிவு செய்யப்பட்டு இருந்தனர். அந்த வாக்குப்பெட்டியின் சீல் கழன்று, அருகில் உள்ள மற்றொரு பெட்டிக்கு அருகில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் சீல் வைக்கப்படாத பெட்டிக்குள் ஏற்கனவே போடப்பட்ட அந்த 177 வாக்குகள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


