கோத்தா கினபாலு, டிசம்பர்.06-
சபா மாநிலத்தின் வருவாயில் 40 விழுக்காடு அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படுவதற்கு தமக்கு இடமளிக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
சபா மாநில விவகாரம் அடுத்த ஜனவரி மாதம் விவாதிக்கப்படும். சபாவிற்கு 40 விழுக்காடு வருவாயைத் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்தில் புத்ராஜெயா உறுதியாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
அதற்கு முன்னதாக அமைச்சரவையில் காலியாக உள்ள 4 பதவிகள் நிரப்பப்பட வேண்டிய அவசியம் தமக்கு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.








