கோலாலம்பூர், அக்டோபர்.05-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் எதிர்வரும் 16வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று முதலீடு, வர்த்தகம், தொழிலியல் அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பி.கே.ஆர் கட்சியில் இணைந்த பிறகு, அடுத்த தேர்தலில் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எழுந்த வதந்திகளை அவர் "வெற்று அரட்டைகள்" என்று நிராகரித்துள்ளார்.
அரசியலில் 100 விழுக்காடு ஆதரவைப் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேதான் கட்சியில் இணைந்ததாகவும், எதிர்ப்புகளைச் சந்திக்கத் தயார் என்றும் ஸாஃப்ருல் துணிச்சலாகக் கூறியுள்ளார். தான் 20 ஆண்டுகள் அம்னோவில் இருந்ததாகவும், "காரணமில்லாமல் கட்சித் தாவவில்லை" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.