Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சக உறுப்புக்கட்சிகளை குறை சொல்ல வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சக உறுப்புக்கட்சிகளை குறை சொல்ல வேண்டாம்

கோலாலம்பூர்,ஜன.2-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவித்து, வரும் ஜனவரி 6 ஆம் தேதி புத்ராஜெயாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆதரவுப்பேரணி தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்தில் வீற்றிருக்கும் சக கட்சிகளை குறைசொல்ல வேண்டாம் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங்கிற்கு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நினைவுறுத்தியுள்ளார்.

டிஏபி.யை வழிநடத்திய லிம் குவான் எங், தலைமைத்துவக் காலம் முடிந்து விட்டது. அக்கட்சியின் புதிய தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு லிம்மிற்கு துணைப் பிரதமருமான ஜாஹிட் நினைவுறுத்தினார்.

பாஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியை காரணம் காட்டி, ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள சக உறுப்புக்கட்சிகளை குற்றஞ்சாட்டி விமர்சிப்பது முறை அல்ல என்பதையும் ஜாஹிட் வலியுறுத்தியாள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →