Jun 26, 2026
Thisaigal NewsYouTube
நூருல் இஸாவை மந்திரி பெசாராக்கும் முயற்சி 2024 இல் தொடங்கியது
அரசியல்

நூருல் இஸாவை மந்திரி பெசாராக்கும் முயற்சி 2024 இல் தொடங்கியது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.29-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும், பிகேஆர் கட்சித் துணைத் தலைவருமான நூருல் இஸாவை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியில் இணைந்த தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸுக்காக ஒரு நாடாளுமன்றத்தையும், நூருல் இஸாவைச் சிலாங்கூர் மந்திரி பெசாராகக் கொண்டு வருவதற்கு ஒரு சட்டமன்றத்தையும் காலி செய்து, அவ்விரு தொகுதிகளிலும் இடைத் தேர்தலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும் என்று ரஃபிஸி குறிப்பிட்டார்.

நூருல் இஸாவை மந்திரி பெசாராகக் கொண்டு வருவதற்கு முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி 2024 லிருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதை கட்சியின் மூலம் தாமும் அறிந்ததாக Yang Berhenti Menteri எனும் ஆடியோ நிகழ்ச்சியில் தொடர்ந்து பேட்டி அளித்து வரும் ரஃபிஸி விளக்கினார்.

Related News

நூருல் இஸாவை மந்திரி பெசாராக்கும் முயற்சி 2024 இல் தொடங்க... | Thisaigal News