கோலாலம்பூர், டிச. 12-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு, சிங்கப்பூரிடம் பறிபோனது தொடர்பில் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரச ஆணையம் செய்துள்ள பரிந்துரை குறித்து விவாதிக்கும் முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே தாம் விட்டு விடுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மாமன்னரால் அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தொடர்பில் இவ்விவகாரததை விவாதிக்கும் கடப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே விட்டு விடுவது மூலம் இது குறித்து அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.