கோலாலம்பூர், அக்டோபர்.09-
மரணத் தண்டனை விதிப்பை மனதாபிமானமற்றச் செயல் என்று வர்ணித்த முன்னாள் புக்கிட் காவான் எம்.பி. கஸ்தூரி பட்டு, மரணத் தண்டனை என்பது உண்மையிலேயே நீதியின் அளவுக்கோல் அல்ல என்று குறிப்பிட்டார்.
உலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நீதி பரிபாலன நடைமுறைகள் மாறிக் கொண்டே இருப்பதால் மரணத் தண்டனை விதிப்பு என்பது இனியும் பொருந்தாது என்று ஜசெக.வின் அனைத்துலக விவகாரங்களுக்கான செயலாளரான கஸ்தூரி பட்டு தெரிவித்தார்.
முன்பு நாம் கனவாக பார்த்த விவகாரங்கள் எல்லாம் AI எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் நிஜத்தைப் போல் தோன்றுகின்றன. அந்த அளவிற்கு உலகம் வளர்ச்சியின் விளிம்பில் உள்ளது. இந்நிலையில் பழங்கால நடைமுறையான மரணத் தண்டனை முறையை தொடர்ந்து நிலைநிறுத்தி வருவது ஏற்புடையது அல்ல என்று கஸ்தூரி பட்டு குறிப்பிட்டார்.