சிலாங்கூர் சுல்தான் ஷராப்புடீன் இட்ரிஸ் ஷாவை தாம் நிந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை கெடா மாநில மந்திரி புசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூர் மறுத்துள்ளார்.
தாம் ஆற்றிய உரை திரிக்கப்பட்டுள்ளதாக சனூசி நூர் குறிப்பிட்டுள்ளார்.சிலாங்கூர் சுல்தானை நிந்தித்ததாக கூறி சனூசிக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 31 போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள சனூசி நூரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டுள்ளா்.
எனினும் , தமது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக சில தரப்பினர் தமக்கு எதிராக தமது உரையை திரித்துள்ளதாக சனூசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
