ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற அனைவரும் தமது வேட்பாளர்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரகடன்படுத்தியுள்ளார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள், பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் என்ற பிரித்தாளும் நிலையின்றி அனைவருமே ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்கள் என்று நேற்றிரவு கோலத்திரெங்கானு, குவால பெராங்கில் நிகழ்த்திய மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான கருத்திணக்கம், மத்திய அரசாங்க அளவிலான தலைமைத்துவத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்பதையும் பிரதமர் தமது உரையில் உறுதி அளித்தார். போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்பாளர்கள் என்பதால் இரு கூட்டணி சார்பில் தாமும், பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் தேர்தல் களத்தில் இறங்கி, பிரச்சாரம் செய்து வருவதாக அன்வார் குறிப்பிட்டார.

Related News

அமைச்சரவை மாற்றத்தில் காலி இடங்கள் மட்டுமே நிரப்பப்படும்

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்


