லஞ்ச ஊழல் தொடர்பில் தமக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மின் விசாரணை முடியும் வரையில் மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும் என்று Pasir Gudang எம்.பி.யும், சட்ட வல்லுநருமான Hassan Abdul Karim கோரிக்கை விடுத்துள்ளார்.
லஞ்ச ஊழல் மீதான SPRM மின் சிறப்பு கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான Hassan Abdul Karim, லஞ்ச ஊழலை வேரறுக்கும் பக்காத்தான் ஹராப்பானின் செயல்திட்டத்திற்கு ஆதரவாக ஒரு முன்னுதாரண எம்.பி.யாக சிவகுமார் விடுப்பில் செல்வதே உத்தமம்.
காரணம், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமான அரசாங்கமாக நாம் விளங்கிட வேண்டும் என்று மேடை தோறும் முழங்குகிறோம். பேசுகிறோம், விவாதிக்கிறோம். மற்றவர்கள் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நாம், முதலில் நாம் உத்தமர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை நமக்கு எதிராக திரும்பும் போது, அந்த விசாரணைக்கு மதிப்பு அளிக்க வேண்டும். எந்தவொரு குறுக்கீடும் செய்யாமல் விசாரணை முடியும் வரையில் விடுப்பில் செல்ல வேண்டும். இதுதான் பக்காத்தன் ஹராப்பன் தலைவர்கள், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பாடாமாக இருக்க வேண்டும் என்று Hassan Abdul Karim குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் பணித் தன்மையே கூட்டுக்கடப்பாகும். ஓர் அமைச்சருக்கு ஏற்படக்கூடிய களங்கம், அதே கண்ணோட்டத்தில் அமைச்சரவையும் பார்க்க வைக்கும். எனவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிடுவதற்கு முன்பே சிவகுமார் விடுப்பில் செல்வதுதான் ஓர்அமைச்சர் என்ற முறையில் அவருக்கு கெளரவமாகும் என்று Hassan Abdul Karim வலியுறுத்தியுள்ளார்.