பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலிஸ கட்சி, "இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி" என்று கூறியதற்காக தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பி.எஸ்.எம் கட்சியின் முக்கியத் தலைவரும் கோத்தா அங்கேரிக் நடப்பு சட்டன்ற உறுப்பினருமான முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
ஓர் அரசியல்வாதி என்ற முறையில் இனதுவேஷ தன்மையிலான அத்தகைய கருத்தை தாம் பதிவிட்டு இருக்கக்கூடாது என்றும், அந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்டதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் முகமது நஜ்வான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேரு சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம் கட்சியின் தொழிலாளர் பிரிவு போராட்டவாதி 42 வயது சிவரஞ்சனி மாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சி நேற்று அறிவித்து இருந்தது. மேரு தொகுதியில் ஓர் இந்தியப் பெண்ணான சிவரஞ்சனியை தனது வேட்பாளராக நிறுத்துவது மூலம் பி.எஸ்.எம் கட்சி, இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளதாக முகமது நஜ்வான் ஏளனப்படுத்தியிருந்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
