Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி
அரசியல்

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள வேளையில், பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் ஐந்து பேர் தங்கள் தொகுதிகளின் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதாக கூட்டாக உறுதியளித்துள்ளனர்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜொகூர் ஜெயா தொகுதி வேட்பாளர் லீ வெர்ன் யிங், பெர்லிங், தொகுதி வேட்பாளர் ஆலன் தீ, ஸ்துலாங் தொகுதி வேட்பாளர் ஆண்ட்ரூ சென், ஸ்கூடாய் தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன், திராம் தொகுதி வேட்பாளர் நூர் சுலைலா அப்துல் கனி ஆகிய ஐந்து வேட்பாளர்களும் வெள்ளத் தடுப்பு, பொதுப் போக்குவரத்து, முதியோர் நலன் மற்றும் எல்லைக் கடப்புப் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

குறிப்பாக, பெர்லிங் பகுதியில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளத்தைத் தடுக்க வடிகால் அமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படும் என்றும், ஸ்கூடாய் தொகுதியில் முதியோர்களுக்கான சமூக மையங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். மேலும், ஜோகூர் பாலத்தில் நிலவி வரும் எல்லைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும், தங்களுக்கு மக்கள் ஆதரவு தந்தால் ஒரு குழுவாக இணைந்து இந்த மாற்றங்களைச் செய்யப் போவதாகவும் வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளனர்.

Related News

நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் அமினுடின் ஹருன் கேள்வி: பிகேஆர் தேர்தல் வாக்குறுதிகளை விட மாநிலத்தின் தற்போதைய முதலீட்டு சாதனை மிக அதிகம்

நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் அமினுடின் ஹருன் கேள்வி: பிகேஆர் தேர்தல் வாக்குறுதிகளை விட மாநிலத்தின் தற்போதைய முதலீட்டு சாதனை மிக அதிகம்

போர் சூழலிலும் மலேசியா நிலைத்திருக்க மடானி அரசாங்கமே காரணம் / செயல்பாடுகளை வைத்து மதிப்பிட மலேசியர்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்

போர் சூழலிலும் மலேசியா நிலைத்திருக்க மடானி அரசாங்கமே காரணம் / செயல்பாடுகளை வைத்து மதிப்பிட மலேசியர்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்

சிறைச்சாலைச் சட்டத் திருத்தம் குறித்து தொடர்புடைய இலாக்காக்களுடன் அரசு ஆலோசனை: உள்துறை அமைச்சர் தகவல்

சிறைச்சாலைச் சட்டத் திருத்தம் குறித்து தொடர்புடைய இலாக்காக்களுடன் அரசு ஆலோசனை: உள்துறை அமைச்சர் தகவல்

வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி

வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு இராணுவம், போலீஸூக்கு அன்வார் உருக்கமான வேண்டுகோள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு இராணுவம், போலீஸூக்கு அன்வார் உருக்கமான வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்