Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிங் தொகுதி மக்களின் பேராதரவோடு களம் இறங்கும் மக்கள் சேவகர் அலன் தீ பூன் சோங் - ஒரு சிறப்பு பார்வை
அரசியல்

பெர்லிங் தொகுதி மக்களின் பேராதரவோடு களம் இறங்கும் மக்கள் சேவகர் அலன் தீ பூன் சோங் - ஒரு சிறப்பு பார்வை

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில், பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார் அலன் தீ பூன் சோங். ஒரு சாதாரண விவசாயி மற்றும் ரப்பர் மரம் சீவும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, எளிய பின்னணியில் இருந்து வந்த இவர் மக்களின் வலிகளை நன்குணர்ந்த ஒரு களப்பணியாளராகத் திகழ்கிறார்.

பொறியியல் மற்றும் சுற்றுலாத் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அலன் தீ பூன் சோங், முன்னாள் செனாய் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது, தாமான் கேட் லுாங் சந்தைக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் . "Let's Art At Sawit" மற்றும் "பகிர்ந்து உண்போம்" இலவச உணவுத் திட்டம் போன்ற சமூகப் புரட்சிகள் மூலம், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தி பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கியவர் அலன் தீ.

தேர்தல் தோல்வியைக் கண்டும் அஞ்சாமல், யோங் பெங்கில் 'நம்பிக்கை சமூக மையத்தை' நிறுவி, குடியுரிமையற்ற ஏழைக் குழந்தைகளுக்குச் சட்டப்படி அடையாள ஆவணங்களை மீட்டுத் தந்து கல்வி ஒளியேற்றியவர் இவர். மேலும், 'பெர்சே' இயக்கத்தின் மூலம் நேர்மையான தேர்தலுக்காகப் போராடியதோடு, நாடு முழுவதும் ஆயிரம் பேருக்கும் மேல் தேர்தல் முகவர் பயிற்சிகளை வழங்கிய ஜனநாயகக் காவலர்.

தற்போது, பெர்லிங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லியூ சின் தோங்கின் வலுவான நல்லாட்சியைத் தொடரவும் , ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மூலம் தினசரி எல்லை கடக்கும் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தவும் அலன் தீ பூன் சோங் அவர்களுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related News