Oct 28, 2025
Thisaigal NewsYouTube
ஊழல், அதிகாரமுறைகேடுகளைக் களைய, இளையோர் அமைப்புகள் அரசாங்கத்துடன் கைக்கோர்க்க வேண்டும்.
அரசியல்

ஊழல், அதிகாரமுறைகேடுகளைக் களைய, இளையோர் அமைப்புகள் அரசாங்கத்துடன் கைக்கோர்க்க வேண்டும்.

Share:

ஈப்போ, ஜூலை 8-

ஊழல், அதிகார முறைகேடு, அடக்குமுறை முதலானவற்றை களைய, நாட்டிலுள்ள இளையோர் சார்ந்த அரசு சாரா அமைப்பு, அரசாங்கத்துடன் கைக்கோர்க்க வேண்டுமென, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்கோரிக்கை விடுத்தார்.

மலேசியா தற்போது, வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதால், அதுபோன்ற நெறியற்ற நடவடிக்கைகளை, அத்தரப்பினர் நிராகரிக்க வேண்டும் என்றாரவர்.

தலைச்சிறந்த நாடாக மலேசியாவை உருமாற்றும் கடப்பாடு அனைவருக்கும் உள்ளதால், பொதுமக்கள் இனியும் அலட்சியமாக இருந்துவிட முடியாது என்றாரவர்.

குறிப்பாக, முதலீடுகள், இலக்கவியல், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, வறுமை துடைத்தொழிப்பு முதலான விவகாரங்களில், இளைஞர்களின் தலைமைத்துவம் இருப்பது அவசியமாவதாகவும் பிரதமர் கூறினார்.

Related News