நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் டிஏபி சார்பில் போட்டியிடவிருக்கும் புதிய முகங்கள் உட்பட 11 வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், நேற்றிரவு அறிவித்துள்ளார். இந்த 11 பேரில் இந்தியர்கள் மூவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களான சிரம்பான் ஜெயாவில் பி. குணசேகரன், நீலாயில் ஜெ. அருள்குமார் மற்றும் ரெபாஹ் வில் எஸ்.வீரப்பன் ஆகியோர் தங்கள் தொகுதிகளை தற்காத்துக்கொள்வதற்கு போட்டியிடும் வாய்ப்பை கட்சி தலைமையகம் மீண்டும் வழங்கியுள்ளது. கடந்த 2018 பொதுத் தேர்தலில் இந்த மூவரில் அருள்குமார் மற்றும் வீரப்பன் ஆகியோர் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
டிஏபி பொதுச் செயலாளரும், நெகிரி செம்பிலான் மாநில டிஏபி தலைவருமான அந்தோணி லோக், ஜெலுபு நாடாளுமன்ற்த தொகுதிக்கு உட்பட்ட சென்னாஹ் தொகுதியை தற்காத்துக்கொள்ள மீண்டும் களம் இறங்கியுள்ளார்.36 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 11 தொகுதிகளை டிஏபி வென்றது.11 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வேளையில் ரஹாங் தொகுதியில் மட்டும் டெஸ்மோன் டியான் மியாவ் கொங் என்ற புதிய வேட்பாளர் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.கடந்த பொதுத் தேர்தலில் ரஹாங் தொகுதியில் வெற்றி பெற்ற மேரி ஜோஸ்பின்க்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அரசியல்
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் குணசேகரன், அருள்குமர், வீரப்பனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு
Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


