Oct 27, 2025
Thisaigal NewsYouTube
பகாங்கில் பூர்வக்குடியினரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய கோரிக்கை
அரசியல்

பகாங்கில் பூர்வக்குடியினரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய கோரிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 15-

அரசியல்வாதிகளை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்வதை, பகாங் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, மலேசிய பழங்குடி மக்கள் கட்சியின் தலைவர் ரஷித் கா' கேட்டுக்கொண்டுள்ளார்.

பூர்வக்குடியினர் அதிகமாக வாழ்ந்துவரும் மாநிலங்களில், பகாங் -ங்கும் ஒன்று. அம்மாநிலத்தில் அதிகமான பூர்வக்குடியினர், கல்வியில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றவர்களாகவும் நிபுணத்துவ பின்னனிகளையும் கொண்டுள்ளனர்.

ஆகையால், அச்சமூகத்தினரை சேர்ந்தவர்களுக்கும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என ரஷித் கா' வலியுறுத்தினார்.

UMNO, MCA, AMANAH, PKR ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நால்வரை, சட்டமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பான தீர்மானம், நேற்று பகாங் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், ரஷித் கா' அக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

பகாங் அரசாங்கம் கொண்டு வந்த அத்தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த PAS கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், சிறும்பான்மையினரான இந்தியர்கள், பூர்வக்குடியினர், மாற்றுத்திறனாளிகள் அல்லது நிபுணத்துவம் வாய்ந்தவர்களிலிருந்து நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்