நவ.8-
சிலாங்கூர் மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 3.00 மணிக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மாநில மந்திரி பெசார் என்ற முறையில் இதனை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்யவிருக்கிறார்.
சிலாங்கூர் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவும் திட்டமானது, மாநில மக்களின் நல்வாழ்வு, மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாடுகள் என மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக விளங்கும் என்று அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார்.
அதேவேளையில் இந்த பட்ஜெட், சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரவு செலவுத் திட்டமாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








