Nov 15, 2025
Thisaigal NewsYouTube
Moyog  சட்டமன்றத் தொகுதி கவன ஈர்ப்பாக மாறியது
அரசியல்

Moyog சட்டமன்றத் தொகுதி கவன ஈர்ப்பாக மாறியது

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.15-

சபா சட்டமன்றத் தேர்தலில் Penampang நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள Moyog சட்டமன்றத் தொகுதி பலரது கவன ஈர்ப்பாக மாறியுள்ளது. இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் இத்தொகுதியில் 12 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் உறுப்புக் கட்சிகளான PKR மற்றும் சபா GRS ஆகிய இரு கட்சிகளும் Moyog தொகுயில் தத்தம் வேட்பாளர்களைக் களம் இறக்கி ஒருவருக்கொருவர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சபா தேர்தலில் Moyog தொகுதியில் வாரிசான் கட்சியின் துணைத் தலைவர் Darell Leiking 5,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related News