நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்ததைத் தொடர்ந்து விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர், புலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தகளை எதிர்கொள்ள தாங்கள் தயாராகி வருவதாக ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் டத்தோ டாக்டர் சஹ்ருடின் ஜாமால் தெரிவித்துள்ளார். இந்த இடைத் தேர்தலுக்காக தாங்கள் 15 வேட்பாளர்களின் பெயர்களை பரிசீலித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். இந்த பட்டியலில் பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் கட்சிகளின் வேட்பாளர்களும் அடங்குவர். ஒவ்வொரு கட்சியும் தலா 3 பெயர்களை வழங்கியிருக்கின்றன. தகுதியான வேட்பாளர்களை கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்யும் என்று டாக்டர் சஹ்ருடின் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தில் அவர் வகித்து வந்த நாடாளுமன்ற மற்றம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


