Jan 20, 2026
Thisaigal NewsYouTube
ரோனி லியூவ் டிஏபி யை விட்டு விலகினார்
அரசியல்

ரோனி லியூவ் டிஏபி யை விட்டு விலகினார்

Share:

டிஏபி யின் முன்னணித் தலைவரும், போராட்டவாதியுமான ரோனி லியூவ், 60 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட அக்கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது விலகல், நாளை முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ரோனி லியூவ், இன்று சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து டிஏபி யில் கடந்த 41 ஆண்டு காலமாக தாம் கொண்டு இருந்த உறுப்பினர் அந்தஸ்தும் ஒரு முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டார்.

டிஏபியின் மத்திய செயலவை உறுப்பினராக பதவி வகித்து வந்த ரோனி லியூ, டிஏபிமுன்னாள் தலைவர் லிம் கிட் சியாங், கட்சிக்குள் குடும்ப அரசியல் நடத்தி வருவதாக கடுமையாக குற்றஞ்சாட்டிய கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இதன் காரணமாக அவர் பல்வேறு நிலைகளில் கட்சியின் தலைமைத்துவத்தினால் ஓரங்கட்டப்பட்டு வந்தார். தமது இளமைக் காலத்தில் உயர் நிலைக்கல்வியைத் தொடர்ந்து கொண்டே கடந்த 1982 ஆம் ஆண்டு டிஏபியில் ஓர் உறுப்பினராக ரோனி லியூ தன்னை பிணைத்துக்கொண்டு, படிபடியாக அரசியலில் உச்சம் பெற்றார்.

Related News