Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் கவலையில்லை என அப்துல் ரஷித் அசாரி கூறுகிறார்
அரசியல்

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் கவலையில்லை என அப்துல் ரஷித் அசாரி கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், மே 15-

பெர்சத்து கட்சியின் உறுப்பினர் தகுதியிலிருந்து, தாம் நீக்கம் செய்யப்பட்டால் தமக்கு சிறிதும் கவலையில்லை. அதன் வழி, இதர கட்சியில் இணையவதற்கான வாய்ப்பு தமக்கு கிட்டும் என செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷித் அசாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளரை ஆதரித்து, அதன் மேடைகளில் தாம் பரப்புரைகளில் ஈடுபட்டது, பெர்சத்து கட்சியின் சட்டத்தை மீறும் செயல் அல்ல.

சம்பந்தப்பட்ட பரப்புரையில் ஈடுபடுவதற்கு முன்பு, கட்சியின் அரசியலைமைப்பை தாம் நன்கு ஆராய்ந்த போது, அந்நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடையை விதிக்கக்கூடிய சட்டவிதிகள் ஏதும் இல்லை என்றாரவர்.

கட்சியை விட்டு வெளியேறுவதாக வெளிப்படையாக அறிவித்தால் அல்லது இதர கட்சிகளில் இணைந்தால் மட்டுமே, கட்சியில் தமது உறுப்பினர் தகுதி பறிபோகும்.

ஆனால், இதுவரையில் தாம் அப்படி எதுவும் செய்யவில்லை என அப்துல் ரஷித் தெளிவுபடுத்தினார்.

கோல குபு பாரு இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளருக்காக பரப்புரைகளில் ஈடுபட்டதற்காக, அப்துல் ரஷித்-ட்டும் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் சுல்காபெரி ஹனாபி-யும் கட்சியின் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாக, பெர்சத்து இதற்கு முன்பு அறிவித்திருந்தது தொடர்பில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்