கோலாலம்பூர், டிசம்பர்.24-
அம்னோ மூத்த தலைவரான தெங்கு ரசாலி ஹம்ஸா, ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ, தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு அம்னோவே திறவுகோல் என்று தெங்கு ரசாலி கருதுகிறார். அம்னோ முறையான தலைமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின்மை நீடிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அம்னோ தனது செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டுமானால், "சுயநலமிக்க தலைவர்களை" அம்னோ அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
பல தலைவர்கள் பிரதமர் பதவி மீது மட்டுமே கண் வைத்துள்ளனர். ஆனால் நாட்டை வழிநடத்துவதற்கான தெளிவான திட்டங்கள் அல்லது ஆக்கப்பூர்வமான யோசனைகள் அவர்களிடம் இல்லை என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.








