Sep 23, 2026
Thisaigal NewsYouTube
இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: பிரதமர் அன்வர் வேண்டுகோள்
அரசியல்

இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: பிரதமர் அன்வர் வேண்டுகோள்

Share:

மலேசியர்கள் இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேர்மை மற்றும் நல்லாட்சியை வழங்கும் தலைவர்களை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பிகேஆர் இளைஞர் பிரிவு நிகழ்ச்சியில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார், மக்களிடையே பயத்தையும் வெறுப்பையும் தூண்டும் பழைய அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றார்.

நாட்டின் உண்மையான சவால் இனம் அல்ல, ஊழலற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சியை உருவாக்குவதே ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர், சீனர், இந்தியர் என அனைத்து இனங்களிலும் உள்ள திறமையான மற்றும் நல்ல தலைவர்கள் ஒன்றிணைந்து மலேசியாவைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நாட்டின் உரிமைகள் அனைவருக்கும் சமமானது என்றும் அவர் கூறினார்.

மேலும், ஒற்றுமையான மலேசியாவை உருவாக்க நாட்டின் இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் அறைகூவல் விடுத்தார்.

Related News