அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலானிலும், பினாங்கிலும் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறுமானால் நெகிரி செம்பிலானில் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்னும், பினாங்கில் சொவ் கொன் யொவ்வும் முறையே மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர் பதவியில் நீடிப்பர் என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கூட்டுப்பணியைத் தொடருவது குறித்து பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி அஹ்மாட் சாஹிட் ஹமிடியுடன் கலந்து பேசப்பட்டபின்னர், அமினுடினையே மாநில மந்திரி பெசாராக நியமிப்பது என்று உடன்பாடு காணப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதேபோன்று பினாங்கிலும் சொவ் கொன் யொவ்வை மீண்டும் மாநில முதல்வராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் சொவ் கொன் யொவ்வை விடம் இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


