பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று சனிக்கிழமைத் தொடங்கி நான்கு நாள், எகிப்துக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.
மலேசியப்பிரதமரின் எகிப்து வருகை, மலேசியாவிற்கும், எகிப்துக்கும் இடையிலான இருவழி நல்லுறவில் ஒரு மைல்கல்லாகும் என்பதுடன் இரு வழி உறவை வலுப்படுத்தும் என்று எகிப்துக்கான மலேசியத் தூதர் டத்தோ முகமட் தாரிட் சுபியான் வர்ணித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த அதிகாரத்துவ வருகையின் போது, அந்நாட்டின் அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்- சிசியையும் சந்திக்கவிருக்கிறார் என்று முகமட் தாரிட் குறிப்பிட்டார்.








