குறிப்பட்ட அரசியல் கட்சி ஒன்று கலவரத்தை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதை போலீஸ் துறை மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தொடர்பாக சமூக ஊகடங்களில் செய்தி ஒன்று பரவி வருவது தொடர்பான புகார் ஒன்றை திரெங்கானு போலீசார் பெற்றுள்ளனர்.
கெமாமானில் உள்ள சுக்காய் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அப்புகார் செய்யப்பட்டுள்ளதாக திரெங்கானு மாநில தேர்தல் நிர்வாக நடவடிக்கைப் பிரிவு போலீஸ் தலைவர் ஏசிபி நூர் ஹாகிம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
மே 13 தேதியன்று நிகழ்ந்தது போன்ற ஒரு கலவரத்தை தூண்டிவிட யுஎம்டிஏபி முயற்சிக்கிறது எனும் அத்தகவலை முகநூல் பக்கத்தில் தாம் கண்ணுற்றதாக அந்த புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
குற்றவில் சட்டம் 505 பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அந்தப் புகார் ஆராயப்பட்டு வருவதாக ஏசிபி நூர் ஹாகிம் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த தகவலில் உண்மையில்லை என்பதையும் அவர் விளக்கினார்.








