Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அன்வார் தலைமையிலான அரசாங்கம் கவிழலாம் - பாஸ் கட்சித்தலைவர்
அரசியல்

அன்வார் தலைமையிலான அரசாங்கம் கவிழலாம் - பாஸ் கட்சித்தலைவர்

Share:

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் வெகுவிரைவில் கவிழலாம் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆருடம் கூறியுள்ளார்.
கோலாலம்பூரில் நேற்று இரவு உலாமா மன்றக்கூட்டத்தில் பேசிய ஹாடி அவாங், அன்வார் தலைமையிலான அரசாங்கம், எந்த அடிப்படையில் கவிழும் என்பதை விவரிக்கவில்லை. ஆனால், இறைவன் அருளில் வெகுவிரைவில் கவிழும் என்று ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
அன்வார் தலைமையிலான அரசாங்க​ம் கவிழுமானால், பாஸ் கட்சி அங்கத்துவம் பெற்றுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, நாட்டிற்கு த​லைமையேற்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் ஹாடி அவாங் விவரிக்கவில்லை.


நடப்பு அரசாங்கம் கவிழ்ந்தால் தங்களை யாரும் குறை சொல்லக்கூடாது என்று ஹாடி அவாங் நேற்று காலையில், சுவர் உடைந்த து கிடக்கும் ஒரு வீட்டை உவமைக்காட்டி எச்சரிக்கை மணி அடித்து இருந்தார்.
நேற்று இரவு நடந்த மற்றொரு கூட்டத்தில் அதனை உறுதிபடுத்தும் வகையில் அன்வாரின் அரசாங்கம் விரைவில் கவிழப்போவதாக ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.

Related News