6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்களிப்பு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் நாளை ஜுலை 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநிலத்தில் உறுப்புக்கட்சிகளின் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடவிருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஜுன் 24 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிடும் நிகழ்வு வெற்றியளிக்கவில்லை. தற்போது தேர்தல் தேதி உறுதியாகி விட்டதால் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் இணைந்து தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிடவிருக்கின்றன.
தெனெரா ஹோட்டல் அருகில் பண்டார் பாரு பாங்கியில் தேர்தல் கேந்திரம் முடுக்கி விடப்படவிருக்கும் இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


