கோலாலம்பூர், நவம்பர்.28-
நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நள்ளிரவு 12 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்துள்ளார்.
எனினும் மொத்தம் 73 தொகுதிகள் சம்பந்தப்பட்ட இந்தத் தேர்தலில், வாக்களிப்பு முடிந்தப் பின்னர் வானிலையைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் வெளியிடும் நேரம் அமைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
வாக்குப் பெட்டிகளைக் கொண்டு வருவதற்கு ஹெலிகாப்படர்கள், இயந்திரப் படகுகள் மற்றும் ஜீப் வண்டிகள் முதலிய வாகனங்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக ரம்லான் ஹாருன் குறிப்பிட்டார்.








