கோலாலம்பூர், ஜூலை 15-
டீசல் விலை உயர்வு காணுமானால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் டீசல் உதவித் தொகைக்கான மொத்த அளவை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும் என் துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
மலேசிய புள்ளி விவர இலாகாவின் ஆய்வை அடிப்படையாக கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர டீசல் உதவித் தொகையான 200 வெள்ளி ரொக்கம், தற்போது போதுமானதாக கருதப்படுகிறது.
அதேவேளையில் எதிர்காலத்தில் டீசல் விலை தொடர்ந்து உயர்வுக் காணுமானால் அந்த உதவிகத் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் ஆராயும் என்று லிம் ஹுய் யிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வை அவ்வப்போது மறுமதிப்பீடு செய்து, டீசலுக்கான உதவித் தொகையின் மொத்த அளவை அரசாங்கம் தொடர்ந்து நிர்ணயித்து வரும் என்று பாரிசான் நேஷனலின் Libaran உறுப்பினர் டத்தோ சுஹைமி நசீர் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலக்குக்கு உரிய டீசல் உதவித் தொகை அமலாக்கம் உட்பட நடப்பு சூழ்நிலையை அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வரும் என்று லிம் ஹுய் யிங் குறிப்பிட்டுள்ளார்.








