கோலாலம்பூர், நவ.9-
இனம், மதம் மற்றும் அரச பரிபாலன் ஆகியவற்றை உட்படுத்தி 3 ஆர் விவகாரங்கள் தொடர்புடைய சட்டத்தில் தெளிவு இல்லாததால் எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பது தொடர்பில் தெளிவின்மை இருப்பதாக பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் எதிர்க்கட்சியினர் எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் குறிப்பாக 3R தொடர்புடைய விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாஸ் கட்சி இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் பைசுடீன் ஸைய் தெரிவித்தார்.








