Oct 27, 2025
Thisaigal NewsYouTube
நீக்கம் செய்தவர்களை கட்சியினுள் சேர்த்துக்கொண்டால், அம்னோவில் பிளவுகளே ஏற்படும்.
அரசியல்

நீக்கம் செய்தவர்களை கட்சியினுள் சேர்த்துக்கொண்டால், அம்னோவில் பிளவுகளே ஏற்படும்.

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 30-

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தலைவர்களையும் உறுப்பினர்களையும் மீண்டும் சேர்த்துக்கொண்டால், அம்னோவில் உட்பூசல்கள் ஏற்படும் என இல்ஹாம் மையம் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஹிசோம்முடின் பாக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அனைவரும், அம்னோவின் தேசிய தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி-யைக் கடுமையாக எதிர்த்தவர்களாவர்.

ஜாஹித் ஹமிடி-யின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர, அவருக்கு எதிராக அத்தரப்பினர் மீண்டும் செயல்பட்டால், ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அம்னோவில் பெரும் பிளவுகள் ஏற்படும் என்றாரவர்.

மேலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதால், பெரிக்காதான் நசியனால் கூட்டணி வசம் சென்றுள்ள இளம் வாக்காளர்களை அம்னோவால் கவர முடியும் என்ற உத்தரவாதம் இல்லை.

மாறாக, அந்த தரப்பினரை தங்கள் வசம் கவர்ந்திழுக்க, அம்னோ ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டுமென ஹிசோம்முடின் பாக்கர் வலியுறுத்தினார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!