கோலாலம்பூர், டிச. 14-
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அஸிஸ் அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர். கட்சியில் இணையப் போவதாக கூறப்படுவது தொடர்பில் தாம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் பெறவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அதேவேளையில் தெங்கு ஸப்ருல் பிகேஆர் கட்சியில் இணைவது தொடர்பில் அம்னோ உச்சமன்றமும் எந்தவொரு அறிக்கையும் பெறவில்லை என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
பொருளாதார வல்லுநரான தெங்கு ஸப்ருல், பிகேஆர் கட்சியில் இணைவது தொடர்பில் தற்போது உயர் மட்ட அளவில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் விளக்கினார்.
எனினும் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், சக உறுப்புக்கட்சிகளின் உறுப்பினர்களை களவாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அகமட் ஜாஹிட் நினைவுறுத்தினார்.








