டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் பெர்சத்து கட்சி, சீனர் வாக்காளர்களின் ஆதரவை பெற முடியாது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பெர்சத்துவும், கெராக்கானும் மதவாத கட்சியான பாஸ்ஸுடன் கூட்டு சேர்ந்து இருப்பதால், அக்கட்சிகளுக்கு சீனர்களின் ஆதரவு இருக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரிக்காத்தான் நேஷனலில் சீனர்களும், இந்தியர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருப்பது, அலங்காரத்திற்காகவே தவிர அவர்களை ஜெயிக்க வைத்து, அரவணைக்க வேண்டும் என்ற நோக்கம் அந்த கூட்டணிக்கு கிடையாது என்று இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அடிப்படையாக கொண்டு, இந்த கருத்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்ததெந்த தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற முடியாதோ, அந்த தொகுதிகளில் டிஏபி மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் அத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தனது சீன மற்றும் இந்திய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது என்று அந்த அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


