Nov 1, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்
அரசியல்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

மலேசியா–அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம், நாட்டிற்குப் பாதகமானது என்று சில தரப்பினர் கூறி வருவது “வெறும் அரசியல் நோக்கம் கொண்டது” என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும், குறிப்பாக பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளை உள்ளடக்கிய முடிவுகள் எடுக்கும் போது, விட்டுக் கொடுத்தலும் இருக்க வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளையில், அவர்களின் கூற்றைப் பொருட்படுத்தாமல், மலேசியா தொடர்ந்து தனது கண்ணியத்தையும், மரியாதையையும் முன்னுரிமையாகக் கருதி செயல்பட்டு வருவதாகவும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கனவே முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் போதுமான விளக்கமளித்து விட்டார் என்று கூறிய அன்வார், சில தரப்பினரின் குறைக் கூறல்களைப் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

செமி கண்டக்டர் மற்றும் அரிய மண் தாதுக்கள் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீனப் பிரதமர் லீ கியாங் ஆகியோருடன் மிகக் கவனமாகக் கலந்தாலோசித்த பின்னரே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்காக நாம் அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டோம் என்று கூறுவது பொய்யானது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News