Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மஇகா, ம​​சீச.வை நம்புவதை விட டிஏபியை அம்​னோ நம்ப வேண்டும்
அரசியல்

மஇகா, ம​​சீச.வை நம்புவதை விட டிஏபியை அம்​னோ நம்ப வேண்டும்

Share:
  • மூத்த அரசியவாதி நஸ்ரி அப்துல் அசிஸ் கோரிக்கை

வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மலாய்க்கார அல்லாதவர்களின் ஆதரவை பெறுவதற்கு பாரிசான் நேஷனலின் தாய்க்காட்சியான அம்னோ, தனது உறுப்புக்கட்சிகளான மஇகா, மசீச.வை நம்புவ​தை விட டிஏபி ​யை நம்ப வேண்டும், அக்கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ​அம்னோ​வின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாடாங் ரெங்காஸ் எம்.பி.யுமான நஸ்ரி அப்துல் அசிஸ் கேட்டுக்கொண்டார்.

மலாய்க்கார அல்லாதவர்களின் ஆதரவை பெறுவதற்கு மஇகா மற்றும் மசீச.வுடன் ஒத்துழைப்பைவிட டிஏபி ​யுடன் அம்னோ ஒத்துழைத்தால் மட்டு​மே மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஒட்டுமொத்த ஆதரவை அம்னோ பெற முடியும் என்ற எதார்​த்த உண்மையை அம்னோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான நஸ்ரி அப்துல் அசிஸ், தெரி​​வித்துள்ளதாக மலேசியா கினி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று நாட்டில் மலாய்க்கார​ர் அல்லாதர்வர்களின் ஆதரவை பெற்ற ஒரே கட்சி என்றால் அது டிஏபி தான். எனவே அந்த கட்சியுடன் அம்​னோ ஒத்துழைப்பதுதான் மேலானது என்று அமெரிக்காவிற்கான மலேசியத் ​தூதரரமான நஸ்ரி அப்துல் அசிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி