Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்
அரசியல்

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.02-

அமெரிக்காவுடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்றும் மலேசியாவின் இறையாண்மை மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் துன் மகாதீர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரஸ்பர ஒப்பந்தத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கையெழுத்திட "உரிமை இல்லை" என்றும், தனியொரு நபர், கூட்டரசைப் பிரதிநிதிக்க முடியாது என்றும் துன் மகாதீர் வாதிட்டுள்ளர்.

பிரதமரின் நடவடிக்கைகள் மலேசியாவின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், துரோகச் செயலாகக் கருதப்படலாம் என்றும், இந்த ஒப்பந்தம் "நாட்டின் அதிகாரங்களை அமெரிக்காவிடம் திறம்பட ஒப்படைக்கிறது" என்றும் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய எந்தவோர் ஒப்பந்தமும், நாடாளுமன்றம் மற்றும் ஆட்சியாளர்கள் மன்றம் உட்பட அரசியலமைப்பின் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று துன் மகாதீர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்ற பிரதமர் தவறியது மூலம் குற்றம் இழைத்துள்ளார் என்று புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் துன் மகாதீர் பேசுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News