கோலாலம்பூர், டிச.3-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயமான இழப்பீடும், அவர்களின் வீடுகளை சீர்படுத்திக்கொடுப்பதும் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கிளந்தான், தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மும்தாஸ் முகமட் நாவி எழப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு கட்டிக்கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.








