Jan 21, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் வாதத்தில் அடிப்படையில்லை
அரசியல்

துன் மகாதீரின் வாதத்தில் அடிப்படையில்லை

Share:

மலேசியா பல்லினங்களை கொண்ட ஒரு நாடு என்று முன்னிலைப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும் என்ற கூறியுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் வாதம், சட்ட ரீதியில் அடிப்படையற்றது என்று சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.

துன் மகாதீர் முதல் முறையாக 22 ஆண்டு காலம் நாட்டின் பிரமாக பொறுப்பு வகித்துள்ளார். அதன் பின்னர் 2 ஆண்டு காலம் மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்று இருந்தார். இரண்டு முறை பிரதமர் பதவியை ஏற்று இருந்த துன் மகாதீர், எந்த சமயத்திலும் மலேசியா, பல்லின மக்களை கொண்டு நாடு அல்ல என்று சொன்னதில்லை. வாதிட்டதில்லை என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

ஆனால், துன் மகாதீர் திடீரென்று மலாய் மேலாதிக்கம் மற்றும் மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட நாடு அல்ல என்று பேசுகிறார் என்றால் அவரின் நோக்கம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராம் கர்ப்பால் கேட்டுக்கொண்டார்.

Related News