Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அம்னோவில் இணைந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அம்னோவில் இணைந்தார்

பட்டர்வொர்த், ஜூன்.14-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில், ஊழலை வேரறுக்கப் போவதாக ஆகாய முழக்கத்துடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராகப் பொறுப்பேற்று, திடீரென காணாமல் போன ஸுல்கிஃப்ளி அஹ்மாட், அம்னோவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

நேற்றிரவு பினாங்கு, பட்டர்வொர்த், சுங்கை டூவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஸுல்கிஃப்ளி அஹ்மாட், அம்னோவில் இணைவதற்கான தனது விண்ணப்பத்தை மெர்பாவ் குடோங் தொகுதி அம்னோ தலைவர் ரம்லி டாவுட்டிடம் வழங்கினார்.

அம்னோவில் இணைந்து தீவிரமாகச் செயலாற்றுவதற்கு இதுவே சரியான தருணம் என்று தாம் உணர்வதாக ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →