நாளை நடைபெறவுள்ள கெடா மாநிலத்தின் 15வது சட்டமன்றத் தேர்தலில் கூலிம் சட்டமன்றத்தை பக்காத்தான் ஹாராப்பான் கைப்பற்ற வேண்டும் என்றால் கூலிம் மாவட்டத்திலுள்ள 55 ஆயிரம் வாக்காளர்களும் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி கட்சி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் அவாங் தே லியான் ஓங் கேட்டுக் கொண்டார்.
கடந்த பத்து ஆண்டுக்காலமாக கூலிம் மாவட்டத்தில் மக்கள் நீதி கட்சி பல வகையான சேவைகளை மக்களுக்காக வழங்கி வருகிறது. இந்நிலையில் கூலிம் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் தம்மை தொகுதி சட்டடன்ற உறுப்பிராக மக்கள் வெற்றி பெறச்செய்வார்களேயானால் மக்களின் வளர்ச்சித்திட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தே லியான் ஓங் உறுதி அளித்தார்.
கூலிம் வட்டாரத்தில் சமூகவியல், பொருளாதாரம் மற்றும் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் மக்களுக்கு தொடர்ந்து உதவிடும் தே லியான் ஓங் கிற்கு மூவின மக்கள் நல்லதொரு ஆதரவை வழங்கி வருகிறார்கள் என்ற போதிலும் நாளை நடைபெறும் தேர்தலில் அந்த ஆதரவு வாக்குப் பெட்டியில் உறுதி செய்தால் மட்டுமே மக்களின் சேவைக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டவரான தே மேலும் ஆக்கப்பூர்வமான சேவையை தொகுதிக்கு வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் கூலிம் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வெளியே வர வேண்டும் . காலை மணி 8.00 க்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை வாக்களிக்கலாம். கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்கள் வாக்குகளை செலுத்தி தம்மை வெற்றி பெறச் செய்யுமாறு தே லியான் ஓங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


