Oct 24, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் வேலை செய்யும் தாய்மார்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி வருடாந்திர நிதி உதவி
அரசியல்

சிலாங்கூர் மாநிலத்தில் வேலை செய்யும் தாய்மார்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி வருடாந்திர நிதி உதவி

Share:
  • பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தலா 1,500 வெள்ளி நிதி உதவி
  • தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல்
  • கூட்டணி

சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல்கூட்டணி, தனது தேர்தல் கொள்கை அறிக்கையை நேற்றிரவு ஷா ஆலாமில் வெளியிட்டுள்ளது. இதில் முதன்மை சலுகையாக சிலாங்கூர் மாநிலத்தில் வேலை செய்து வரும் தாய்மார்களுக்கு வருடாந்திர நிதி உதவியாக தலா ஆயிரம் வெள்ளி வழங்கப்படும் அதேவேளையில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தலா 1,500 வெள்ளி நிதி உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதில் தாய்மார்களுக்கு ஏற்படும் செலவினத்தை குறை​க்கும் நடவடிக்கையாக தாய்மார்களுக்கு இந்த ​வருடாந்திர நிதி உதவியை மாநில அரசு வழங்கவிருக்கிறது என்று சிலா​ங்கூர் மாநில தேர்தல் கொள்கை அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட மாநில மந்திரி புசார் டத்தோ செரி அமுருடின் ஷாரி இதனை தெரிவித்தார்.

தவிர, சிலாங்கூர் இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 வெள்ளி சம்பளத்துடனான தொழில்துறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், 2 லட்சம் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டு சிலாங்கூர் இலவச மக்கள் கல்வித் திட்டத்தை விரிவுபடுத்துதல், மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ், ஜப்பானிய மற்றும் கொரியன் போன்ற பன்மொழிகளை கற்றுக்கொள்வதற்கு சிலாங்கூர் மக்களுக்கு இலவச வகுப்புகளை வழங்குதல் உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை உள்ளடக்கிய அனுகூலங்களை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்தார்.

"வளமான பொருளாதாரம், தரமான கல்வி, உயர் வருமானம் கொண்ட வேலை வாய்ப்புகள்" என்ற கருப்பொருளில் சிலாங்கூர் மாநில தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related News