கிளந்தான் திரங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் சுதந்திர நாளை முன்னிட்டு வெவ்வேறான கருபொருள்களில் தேசிய தினம் கொண்டாடப்பட வேண்டும் என பெரிக்கத்தான் நெசனல் இளைஞர் பிரிவு பரிந்துரைத்துள்ள கருத்தைக் கெரக்கான் கட்சி ஏற்றுக் கொள்ளாது என அக்கட்சியின் தலைவர் டொமினிக் லோக் தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நெசனல் இளைஞர்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தேசிய ஒருமைப்பாடு அரசிலாக்கப்பட கூடாது என அவர் தெரிவித்ததுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் என்று அவர் கூறினார்.








