Jan 8, 2026
Thisaigal NewsYouTube
பதவி விலக வேண்டிய நேரம் வந்து விட்டது - அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அறிவிப்பு
அரசியல்

பதவி விலக வேண்டிய நேரம் வந்து விட்டது - அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.07-

தான் பதவி விலக வேண்டிய நேரம் வந்து விட்டதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் சாலே இன்று தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கு ஆதரவாக தன்னால் முடிந்த வரை குரல் கொடுத்து வந்ததைச் சுட்டிக் காட்டியுள்ள அக்மால், கட்சியின் நலனும், அவர்களின் குரலும் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்தில் தன்னுடன் சேர்ந்து குரலை எழுப்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த அக்மால், மதம், இனம் மற்றும் தேசத்தின் நலனுக்காக நேர்மையான நோக்கத்துடன் செயல்பட்டால், கடவுளின் அருளால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ இளைஞர் பிரிவின் சிறப்பு மாநாட்டில் எழுப்பப்பட்ட பல தீர்மானங்களை மறுபரிசீலனை செய்ய முன்வந்ததற்காக, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடிக்கு அக்மால் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Related News