Sep 25, 2026
Thisaigal NewsYouTube
"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி
அரசியல்

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

Share:

கோலாலம்பூர், ஜூன்.07-

ஜசெக கட்சியுடன் ஒரே மேசையில் அமர்வதை விட மந்திரி பெசார் பதவியைத் துறப்பேன் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி கூறிய கருத்துக்கு ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஜசெக உடன் ஒரே மேசையில் அமர விரும்பவில்லையா? அந்த அகந்தையுடனே தொடருங்கள் என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜசெக தலைவர்களுடன் ஒரே மேசையில் அமர்வதையும் சுட்டிக் காட்டியுள்ள அந்தோணி லோக், ஸாஹிட் ஹாமிடியுடன் தாம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஓன் ஹாஃபிஸ் மற்றும் அந்தோணி லோக் இடையிலான இந்த விவாதம், ஜோகூர் அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து