Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்:  அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து
அரசியல்

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்: அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

Share:

சிரம்பான், ஜூலை.26-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் என்பது மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனநாயகப் போட்டியே தவிர, இனம் மற்றும் மதவாத உணர்வுகளைத் தூண்டவோ, அரச குடும்பத்தை அரசியல் விவாதத்திற்குள் இழுக்கவோ, அவதூறுகளைப் பரப்பி வாக்கு சேகரிக்கவோ பயன்படுத்தப்படும் மேடை அல்ல என்று அரசாங்க செய்தித் தொடர்பாளரும், தொடர்புத் துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளையும், கடந்த கால செயல்பாடுகளையும், மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைத்து, அதன் அடிப்படையில் போட்டியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபாஹ்மி ஃபாட்சீல் கூறுகையில், மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை செலவின உயர்விலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், சில தரப்பினர் இனவாத உணர்வுகளைத் தூண்டியும், பொய்யான தகவல்களைப் பரப்பியும் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஓர் அரசியல் கட்சியிடம் புதிய யோசனைகள் இல்லாத போது, வெறுப்பையும் பிளவையும் விற்பதே அதன் அரசியலாக மாறுகிறது என்றும் ஃபாஹ்மி ஃபாட்சீல் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், தங்கள் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளில் நம்பிக்கை கொண்ட கட்சிகள், உண்மைகளையும் சாதனைகளையும் முன்வைத்தே மக்களிடம் வாக்கு சேகரிக்கும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

இதனிடையே, வாக்காளர்கள் வேலை வாய்ப்பு, வீடு, வாழ்க்கைச் செலவு குறைப்பு போன்ற அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ஃபாஹ்மி ஃபாட்சீல், இன மற்றும் மதவாத தூண்டுதலைத் தவிர்த்து, தேர்தல் பிரசாரமானது உண்மைகள் மற்றும் சட்டங்களை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம் என்றும், குறுகிய அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்றும் ஃபாஹ்மி ஃபாட்சீல் எச்சரித்துள்ளார்.

அதேவேளையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மக்கள், ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியலுக்கும், பிளவை உருவாக்கும் அரசியலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்து, உண்மைக்காக செயல்படும் தலைமைக்கு தங்களின் வாக்குகளைச் செலுத்துவார்கள் என்றும் ஃபாஹ்மி ஃபாட்சீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டம்: வீரப்பன் கூறுகிறார்

சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டம்: வீரப்பன் கூறுகிறார்

சென்னா தொகுதியில் அந்தோனி லோக் கடும் சவாலை எதிர்கொள்வார் - ஓங் கியான் மிங் பகுப்பாய்வு

சென்னா தொகுதியில் அந்தோனி லோக் கடும் சவாலை எதிர்கொள்வார் - ஓங் கியான் மிங் பகுப்பாய்வு

இனவாத மற்றும் மத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் - சிம் டி ஸின் வலியுறுத்தல்

இனவாத மற்றும் மத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் - சிம் டி ஸின் வலியுறுத்தல்

 நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

பிரித்தாளும் வெளிப்புற சக்திகளை புறந்தள்ளி, கூட்டு வலிமைக்கு முன்னுரிமை கொடுத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்: நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்திற்கு டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவுறுத்தல்!

பொருளாதார உயர்வுடன் கூடிய சுபிட்சமான வாழ்விற்கு பக்காத்தான் ஹராப்பானைத் தேர்வு செய்க: வாக்காளர்களுக்குத் தெங்கு ஜப்ருல் அழைப்பு

பொருளாதார உயர்வுடன் கூடிய சுபிட்சமான வாழ்விற்கு பக்காத்தான் ஹராப்பானைத் தேர்வு செய்க: வாக்காளர்களுக்குத் தெங்கு ஜப்ருல் அழைப்பு