Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்
அரசியல்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

Share:

ஷா ஆலாம், ஜூலை.26-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக இணைந்துள்ள பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில், வாக்குப்பதிவுக்கு முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் அக்கூட்டணியின் தேர்தல் இயக்குநர் சனூசி நோர் பிரசாரக் கூட்டமொன்றில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று பாரிசான் தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி உத்தரவிட்டிருந்ததாகவும் அமிருடின் தெரிவித்துள்ளார்.

என்றாலும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார், ஸாஹிட்டின் கருத்தை நிராகரித்து, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான மாநிலத் தேர்தல் வரையில், சனூசி நோர் தொடர்ந்து பிரசாரத்தில் பங்கேற்க முழு சுதந்திரம் அளித்துள்ளதையும் அமிருடின் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்கு முன்பு பாரிசானும், பக்காத்தானும் தொகுதிப் பங்கீடு செய்த போது இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய அமிருடின், இந்த புதிய கூட்டணியானது பேச்சுவார்த்தையில் இருக்கும் போதே அவர்களுக்குள் பிரச்சினை தொடங்கி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்