Jan 16, 2026
Thisaigal NewsYouTube
பொதுத்தேர்தலுக்குப் பின்னரே அம்னோ உட்கட்சித் தேர்தல்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு
அரசியல்

பொதுத்தேர்தலுக்குப் பின்னரே அம்னோ உட்கட்சித் தேர்தல்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.16-

அம்னோவின் கட்சித் தேர்தல்கள் பொதுத்தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு நடைபெறவிருந்த உட்கட்சித் தேர்தல்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

"அம்னோ உட்கட்சித் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த பொதுத்தேர்தல் நடைபெறும் வரை நாங்கள் காத்திருப்போம்," என்று அவர் தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களின்படி, குறிப்பிட்ட காலத்திற்கு உட்கட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க கட்சிக்கு அதிகாரம் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

Related News